229

3. குறிஞ்சி

(23) அம்மவாழிப் பத்து


229. அம்ம வாழி தோழி நாமழப்
   பன்னாள் பிரிந்த வறனி லாளன்
   வந்தன னோமற் றிரவிற்
   பொன்போல் விறற்கவின் கொள்ளுநின் னுதலே.

  எ-து வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டானென்
பது கேட்டுத் தலைமகட்கு எய்திய கவினைத் தோழி தான் அறியா
தாள் போன்று அவளை வினாவியது.

  குறிப்பு. பன்னாள்-பலநாள். அறனிலாளன்-தருமமற்றவன்.
தலைவன் பிரிவால் தலைவி அழல் : ஐங். 232. நின்னுதல் பொன்
போல் கவின் கொள்ளும், நாமழப் பிரிந்த அறனிலாளன் இரவில்
வந்தனனோ. பொன்போற் கவின் கொள்ளும் நுதல் : ஐங். 105 : 4.
230 : 4. பிரிந்த தலைமகன் வரத் தலைவி கவின் எய்தல் : ஐங். 238 :
4-5. மு. 263.    ( 9 )