231

3. குறிஞ்சி

(24) தெய்யோப் பத்து


231. யாங்கு 1வல்லுநையோ வோங்கல் வெற்ப
    இரும்பல் கூந்தற் றிருந்திழை யரிவை
    திதலை மாமை தேயப்
    பசலை பாயப் பிரிவு தெய்யோ.

 எ-து ஒருவழித் தணந்துவந்த தலைமகட்குத் தோழி கூறியது.

  குறிப்பு. யாங்கு-எப்படி. வல்லுநையோ-வல்லவனானாயோ.
வெற்ப : விளி, இரும்பல் கூந்தல்-கரிய பலவாகிய கூந்தல்: ஐங்.
281 : 3 ; குறுந். 19 : 5 ; அகநா. 142 : 18 ; திதலை-தேமல், மாமை
தேயப் பசலை பாய்தல் : குறுந். 27 : 4-5, தெய்ய : அசைநிலை
இடைசொல்; தெய்யோவெனத் திரிந்தது. வெற்ப, பிரிதல் யாங்கு
வல்லுநையோ.

  (மேற்) மு. பிரிந்து மீண்டுவந்த தலைவன் தன்னொடு நொந்து
நொந்து வினாதல் (நம்பி. களவு, 52).

   (பி-ம்) 1 ‘வல்லுனையோ? ‘வல்லினையோ? ( 1 )