எ-து ஒருவழித் தணந்துவந்த தலைமகன், ‘நான்பிரிந்த
நாட்கண் நீர் என் செய்தீர்?? எனக்கேட்கத் தோழி அவற்குச்
சொல்லியது.
குறிப்பு. போது-மலர், இயலணி என்றது தலைவியை, அழுங்க-
இரங்க ஏதிலாளனை-ஏதிலாளன் தன்மையையுடையாய்; குறுந்.
191 : 5, மணிப்பூண்-அழகிய ஆபரணங்கள். பெயல்-கண்ணீர்
பெய்தலை. ஆனா-நீங்கா. என் கண் : தான் அவள் என்ற
வேற்றுமையின்றிக் கூறியது. நீ பிரிந்ததற்கு என் கண் பூண்
நனையப் பெயலை ஆனா.
(மேற்) மு. இப்பாடலது ஈற்றடியை முச்சீராகப் பிரித்தல்
தகாது; ஆசிரியம் முச்சீரால் இறுக என ஒத்து இலாமையின்.
அதனை வகை யுளி சேர்த்தி முறையே புளிமா, தேமா, தேமா என
அலகிடுக (யா. வி, 95). பாங்கி தலைவியை ஆற்றுவித்திருந்த
அருமை தலைவற்குச் சொல்லல் (நம்பி. களவு. 52)
(பி-ம்) 1 ‘ஏதிலாட்டியை? ( 2 )