233

3. குறிஞ்சி

(24) தெய்யோப் பத்து


233. வருவை யல்லை 1வாடைநனி கொடிதே
   அருவரை மருங்கி னாய்மணி வரன்றி
   ஒல்லென விழிதரு 2மருவிநின்
   கல்லுடை நாட்டுச் 3சொல்ல றெய்யோ.

 எ-து ‘ஒருவழித்தணந்து வரையவேண்டும்? என்ற தலை
மகற்குத் தோழி சொல்லியது,
   (ப-ரை.) ‘ஆய்மணி வரன்றி ஒல்லென இழிதரும் அருவி நின்
கல்லுடை நாட்டு? என்றது ‘செல்லின் வரைதற்கு வேண்டுவன
கொண்டுவருவாயாக? என்று உணர்த்தியவாறு
   குறிப்பு. வருவை அல்லை-வாராய். வரன்றி-வாரி யடித்துக்
கொண்டு. மணி வரன்றி வீழும் அருவி; ?மணிவரன்றி, வீழு மருவி
விறன்மலை? (நாலடி. 369) கல்-மலை. செல்லல்-செல்லாதே.
  (மேற்) மு. பாங்கி தலைமகனைச் செலவு விலக்கல் (நம்பி. களவு.
52)

  (பி-ம்.) 1 ‘வாடை கொடிதே? 2 ‘மருவிநுன்? 3 ‘செல்லே றெய்யோ? ( 3 )