எ-து இடைவிடாது வந்து ஒழுகாநின்றே களவுநீடாமல் வரை
தற்கு முயல்கின்ற தலைமகன் தலைமகள் வேறுபாடுகண்டு, ‘இதற்குக்
காரணம் என்?? என்று வினாவியவழி, நின்னைக் கனவிற்கண்டு
விழித்துக் காணாளாய் வந்தது? எனத் தோழி சொல்லி வரைவு
முடுக்கியது.
குறிப்பு. மின்-ஒளி. சாஅய்-மெலிந்து. இவள்-தலைவி.
நனவில் நின் மார்பைக் காணாள், ஆதலின் சாஅய் நுதல் பசத்தல்
ஆவது. அடி. 3-4 : ?துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்,
நெஞ்சத்த ராவர் விரைந்து? (குறள், 1218). இது கனவு நலிவுரைத்
தல் எனப்படும்.
(மேற்) மு. கனவு நலிபுரைத்தது (நம்பி களவு. 50)
(பி-ம்.) 1 ‘பசத்தல்யாவது? ( 4 )