235

3. குறிஞ்சி

(24) தெய்யோப் பத்து


235. கையுற வீழ்ந்த மையில் வானமொ
    டரிது 1காதலர்ப் பொழுதே யதனால்
    தெரியிழை தெளிர்ப்ப முயங்கிப்
    பிரியல மென்கமோ வெழுகமோ தெய்யோ.

 எ-து உடன்போக்கு நேர்வித்தபின்பு தலைமகன் உடன்
கொண்டு போவான் இடையாமத்து வந்துழித் தலைமகட்குத் தோழி
சொல்லியது.
  குறிப்பு. மை-மேகம். பொழுது அரிது. தெரியிழை-ஆராய்ந்
தணியப்பட்ட அணிகள். தெளிர்ப்ப-ஒலிப்ப முயங்கி-கூடி.
பிரியலம் என்கமோ-பிரியோம் என்போமோ. எழுகமோ-தலைவ
னுடன் செல்வோமோ.
   (பி-ம்.) 1 ‘காதலர் பொழுதே? ( 5 )