236

3. குறிஞ்சி

(24) தெய்யோப் பத்து


236. அன்னையு மறிந்தன ளலருமாயின்று
    நன்மனை நெடுநகர் புலம்புகொள வுறுதரும்.
    இன்னா வாடையு மலையும்
    நும்மூர்ச் செல்க மெழுகமோ தெய்யோ.

 எ-து களவொழுக்கம் வெளிப்பட்டமையும் தம் மெலிவும்
உணர்த்தித் தோழி உடன்போக்கு நயந்தாள்போன்று வரைவு
கடாயது.
  குறிப்பு. அலர்-பலர் அறிந்துகூறும் பழிமொழி. ஆயின்று-
உண்டாயிற்று. புலம்புகொள-தனிமையை யடைய. உறுதரும்-
தீண்டும். இன்னாவாடை-தீய வாடைக்காற்று. அலையும்-வருத்தும்.
நும்மூர் என்றது தலைவனூரை, செல்வம்-போவோம். எழுகமோ-
எழுவோமோ. அறிந்தனள், ஆயின்று உறுதரும், அலையும்
எழுகமோ.
  (மே.ற்.) மு. எண்ணுதற்கரிய பல நகையாட்டுக்களை (அலர் முத
லியவற்றை)த் தலைவனிடம் குறிக்கும்போது தோழிக்குக் கூற்று
நிகழும் (தொல். களவு. 24, இளம்.). தோழி நல்ல கூறுபாடுடைய
சொற்களை அசதியாடிக் கூறுதல் (தொல். பொருள். 43, ந.)  ( 6 )