எ-து அல்லகுறிப்பட்டு நீங்கிய தலைமகனை வந்திலனாகக்
கொண்டு அவன் பின்புவந்துழி அவற்குத் தோழி சொல்லியது.
குறிப்பு. கடவ-செலுத்த. இனைப்ப-வருத்த. வரைக்கு-மலைக்கு.
நும்மூர் வரைக்கு யாங்கெனப் படுவது.
(மேற்). மு. தோழி கூற்றுள் ஊர் சுட்டித் தலைவன்மாட்டுத்
தோன்றும் கிளவி (தொல். களவு. 24, இளம்.). தோழி கூற்றுள்
ஊரை இறப்பக் கூறியது (தொல். களவு. 23. ந.) இறைவன் மேல்
பாங்கி குறிபிழைப்பேற்றல் (நம்பி. களவு. 44) இ. வி. 519.
(பி-ம்.) 1 ‘வுள்ள மினைய’, ‘வுள்ள மிளைப்ப’ ( 7 )