238

3. குறிஞ்சி

(24) தெய்யோப் பத்து


238. வார்கோட்டு வயத்தகர் வாராது மாறினும்
    குருமயிர்ப் புருவை யாசையி னல்கும்
மாஅ லருவித் தண்பெருஞ் சிலம்ப
1நீயிவண் வரூஉங் காலை
மேவரு மாதோ விவணலனே தெய்யோ.

 எ-து வரையாது வந்தொழுகும் தலைமகனுக்கு, ‘இவள்கவின்
நீ வந்தகாலத்து வருதலால் நீ போனகாலத்து அதன் தொலைவு
உனக்கு அறியப்படாது’ எனத் தோழி சொல்லி வரைவுகடாயது.

 (ப-ரை.) வார்கோட்டு வயத்தகர் வாராது மாறினும் பின்பு
வரக்கூடுமென்னும் ஆசையாலே புருவை தங்குமென்றது இவளும்
இவ்வாறே நின்னைக் காணலாமென்னும் ஆசையாலே உயிரோடு
வாழாநின்றாளென்பதாம்.

   குறிப்பு. வார்கோட்டு வயத்தகர்-நீண்ட கொம்பையுடைய
வலிமிக்க ஆட்டுக்கிடாய். மாறினும்-நீங்கிப்போயினும். குருமயிர்ப்
புருவை-நிறம் பொருந்திய மயிரையுடைய பெண்ணாடு; நற். 321 : 1.
அல்கும்-தங்கும். மாஅல் அருவி-பெரிய அருவி. வரூஉங் காலை-
வந்த காலத்தில். மேவரும்-பொருந்தும். இவள் நலன் நீ வரூஉம்
காலை மேவரும். தலைவனோடு நலம்வருதல் : ஐங் 229. அடி, 4-5
263 : 3-4. (பி-ம்.) 1 ‘நீயவண்’   ( 8 )