239

3. குறிஞ்சி

(24) தெய்யோப் பத்து


239. 1சுரும்புணக் களித்த புகர்முக வேழம்
   இரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத் தழூஉநின்
   குன்றுகெழு நன்னாட்டுச் சென்ற பின்றை
   நேரிறைப் பணைத்தோண் ஞெகிழ
   வாரா யாயின் வாழேந் தெய்யோ.

  எ-து ‘வரைவிடை வைத்துப் பிரிவல்? என்ற தலைமகற்குத்
தோழி கூறியது.

  (ப-ரை.) மதவேழம் துறுகல்லைப் பிடியென்று தழுவும் நாடனாத
லால் நினக்குத் தகுதியல்லாதாளொருத்தியைத் தகுதியுடையா
ளென்று வரையவுங்கூடுமென நகையாடிக் கூறியது.

  குறிப்பு. சுரும்புண்ணக் களித்தல் கூறினமையின் மதம்
உடைமை பெறப்பட்டது. புகர்-புள்ளி. வேழம்-யானை. பிணர்-
சருச்சரை. துறுகல்-குண்டுக்கல்லை. பிடி செத்து-பெண் யானை
என நினைத்து. துறுகல்லிற்குப் பிடி : மலைபடு. 384; குறுந் 111 : 4-5;
கலித். 108 : 40. இறைப்பணைத்தோள் : ஐங். 181 : 1, குறிப்பு.
வாழேம்-வாழமாட்டோம்.

  (பி-ம்.) 1 ‘கரும்புணக் களித்த? ( 9 )