எ-து தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதானமை 3அறிந்து
தலைமகள் புலந்தவழி, அவன் அதனை இல்லையென்று மறைத்
தானாகத் தோழி சொல்லியது
குறிப்பு. அறியோம் அல்லேம்-அறியாதவராக இல்லை. அறிந்
தனம்-அறிந்துகொண்டோம். பொறி-புள்ளிகள். சிறைய-சிறகை
யுடையவான. சாந்தம்-சந்தனம். நறியோள்-நறுநாற்றங் கொண்ட
வள்; என்றது பரத்தையை. நின் மார்பு நறியோளது கூந்தல்
நாறும்; அதனால் புறத்தொழுக்கம் உளதானமையை அறிந்தனம்.
(மேற்) மு. இது புறத்தொழுக்கம் இன்றென்றாற்குத் தோழி
கூறியது; திணை மயக்குறுதலுள் குறிஞ்சிக்கண் மருதம் நிகழ்ந்தது
(தொல். அகத், 12. ந.). இரந்துகொண்டு தன் காரியத்தைக் கூறுத
லுற்ற தலைவனைத் தோழி, ‘நுமது கூட்டத்தினை யான் முன்னே.
அறிவல்’ என வாய்மை கூறல் (தொல். பொருள். 43. ந.). புறத்
தொழுக்கம் இன்றென்றாற்குத் தோழி கூறியது ; இதில் ஊடல்
வந்தது ; குறிஞ்சித் திணையொடு உரிப்பொருள் மயங்கி வந்தது.
(இ. வி. 394)
(பி-ம்.) 1 ‘அறியேமல்லோம்’ 2 ‘மார்பேஎ’ 3 ‘அறிந்த
தலைமகள்’
( 10 ) (24) தெய்யோபத்து முற்றிற்று.