எ-து இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவுகண்டு,
‘இஃது எற்றினான் ஆயிற்று:? என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி
அறத்தொடு நிலை துணிந்த தோழி செவிலி கேட்குமாற்றால் தலை
மகட்குச் சொல்லியது.
குறிப்பு. நம்முறு துயரம்-நம்மை உற்ற துயரத்தை; வேலனைத்
தந்தாளாயின், வெறி-வாசனை. கேண்மை-நட்பை. எயிற்றோயே
என்றது தலைவியை; விளி. எயிற்றோயே ! வேலன், நாடன் கேண்
மையை யறியுமோ.
(மேற்). வெறியாட்டிடத்துத் தலைவி வெருவினாற் கூறியது.
(தொல். களவு. 21, இளம்.). (பி-ம்.). 1 ‘யெயிற்றாயே? ( 1 )