244

3. குறிஞ்சி

  5) வெறிப் பத்து


244. அம்ம வாழி தோழி 1பன்மலர்
    நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
    குன்றம் பாடா னாயின்
    என்பயஞ் செய்யுமோ 2வேலற்கவ் வெறியே.

   எ-து வெறியாடல் துணிந்துழி விலக்கலுறுந்தோழி செவிலி
கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது.
  குறிப்பு. நெடுந்தகையினது குன்றத்தைப் பாடானாயின், தலை
வன் குன்றைப் பாடுதல் : குறுந். 23 : 4. பயன்-பயனை, நெடுந்தகை
யது குன்றம் பாடானாயின் வேலற்கு அவ்வெறி என் பயம் செய்
யுமோ?

 (மேற்) மு. செவிலி அறிவரை வினாஅய்க் குறி பார்த்தவழித்
தலைவியை முன்னிலையாகத் தோழி கூறியது (தொல். கவு. 24,
இளம்). இது தோழி தாயறியாமை கூறி வெறிவிலக்கத் தலைவிக்குக்
கூறியது. (தொல். களவு. 23, ந.)
  (பி-ம்.) 1 ‘புனமலர்? 2 ‘வேலற்கு வெறியே? ( 4 )