எ-து தலைமகள் வேறுபாடுகழங்கினால் தெரியுமென்று வேலன்
கூறிய வழி, அதனைப் பொய்யென இகழ்ந்த தோழி வெறிவிலக்கிச்
செவிலிக்கு 2அறத்தொடு நின்றது.
(ப-ரை.) நின்ற இவள் நலனென்றது கற்புடைமையை.
குறிப்பு. பெய்ம்மணல் முற்றம்-மணல் பரப்பப்பட்டுள்ள
முற்றம்; முற்றத்தில் மணல் பரப்பியிருத்தல் : மணி 1 : 50-51. மலை
வான்-மாறுபாட்டினால். சினைஇய-சினங்கொண்ட. கழங்கினான்
அறிவது-கழற்சிக்காயை இட்டு அறிவது. நின்ற இவள் நலன்
கழங்கால் அறிய இயலாது என்றபடி.
(மேற்) மு. இது வேலன் கழங்கு பார்த்தமை கூறிற்று (தொல்.
களவு. 24, ந.)
(பி-ம்.) 1 ‘கழங்குதா னறிகுவ? 2 ‘அறத்தொடு நிற்பான் கூறியது.? ( 8 )