251

3. குறிஞ்சி

(26) குன்றக்குறவன் பத்து


251. குன்றக் குறவ னார்ப்பி னெழிலி
நுண்ப லழிதுளி பொழியு நாட
நெடுவரைப் படப்பை நும்மூர்க்
கடுவர லருவி காணினு மழுமே.

 எ-து வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவுவேட்ட தோழி கூறியது.

  (ப-ரை.) ‘நும்மூர்க் கடுவரல் அருவி காணினும் அழுமே’
என்றது அது நின்மலையினின்றும் வீழ்கின்ற அருவியென்றது
கொண்டு அதற்கு நின் கொடுமை கூறி இவள் அழும் எ-று.

  குறவன் உழவு முதலாகிய வினைக்கு ஆர்ப்பின், அதற்கு இன்றி
யமையாத நீரை நுண்மழை பொழியும் நாடனாகி வைத்தும் எம்
வேட்கை யறிந்து அதற்குத் தக ஒழுகுகின்றலை யென்பதாம்.

  குறிப்பு. குறவன்-சாதியொருமை; பின்னும் இப்படியே
கொள்க. எழிலி-மேகம். நுண்பல் அழிதுளி-நுண்ணிய பலவாகிய
அழிந்த நீர்த் துளியை. மழைபெய்யும் பொருட்டுக் குறவர் ஆர்த்
தல் : “மலைவான் கொள்கென” (புறநா. 143 : 1) : திருச்சிற். 159,
260, 279, படப்பை-சேலை. கடுவரல் அருவி-விரைந்து வருகின்ற
அருவி. இவள்-தலைவி.