எ-து வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த பருவத்
திற்கு முன்னே வந்தானாக ‘உவந்த தோழி தலைமகட்குச் சொல்
லியது.
(ப-ரை.) குறவனது புல்வேய்குரம்பைப் பொல்லாங்கினை இள
மழை மறைக்கும் நாடனென்றது, பிரிவின்கண் தங்கட்கு வந்த
துன்பத்தை இவன் மறைத்தது நோக்கிக் கூறியவாறு
.குறிப்பு. புல்வேய் குரம்பை-புல்லால் வேயப்பட்ட குரம்பையை;
குறுந். 235 : 5. மன்று-தோட்டத்தின் நடு, புரையோன்-உயர்ந
்தோன். அளைஇய-கலந்த. கூதிர்ப் பெருந்தண்வாடை-கூதிர்க்
காலத்துப் பெரிய குளிர்ந்த வாடைகாற்று.
(மேற்) மு. இப்பாட்டினுள் வறுமை கூர்ந்த புல்வேய்
குரம்பையை மழை புறமறைத்தாற்போல வாடை செய்யும் நோய்
தீர்க்க வந்தானென்று, உள்ளுறையுவமம் செய்தவாறு கண்டு
கொள்க (தொல். உவம. 29, பேர்.). (பி-ம்.) 1 ‘குறவர்? 2 ‘புரைவன்?
3 ‘விரையல் 4 ‘உவந்து தோழி? ( 2 )