253

3. குறிஞ்சி

(26) குன்றக்குறவன் பத்து


253 குன்றக் குறவன் சாந்த நறும்புகை
   தேங்கமழ் சிலம்பின் வரையங் கமழும்
   1கானக நாடன் வரையின்
   மன்றலு 2முடையள்கொ றோழி யாயே.

  எ-து வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவொடு
புகுதரா நின்றானென்பது தோழி கூறக்கேட்ட தலைமகன் அவட்குச்
சொல்லியது.

  (ப-ரை.) தேன் நாறுகின்ற மலைக்கண்ணே குறவன் சாந்தநறும்
புகை கமழுமென்றது நம் மனைக்கண் செய்கின்ற சிறப்புக்கு மேலே
மணவினையால் அவர் செய்யும் 3சிறப்பு மிகும்.................. வண்ணம்
விளைப்பாள் கொல் எ-று.

  குறிப்பு. சாந்த நறும்புகை-சந்தனத்தின் மணம் கமழ்கின்ற
புகை; புறநா. 108 : 1-2. தேன்கமழ் சிலம்பு-தேன் நாறுகின்ற மலை
யினது. வரையகம்-பக்கமலையின்கண். வரையின்-வரைந்து
கொள்ளின், மன்றல்-மகிழ்ச்சி. யாய் நாடன் வரையின் மன்றலும்
உடையள் கொல்.

  (மேற்) மு. காதலி நற்றாய் உள்ளமகிழ்ச்சியுள்ளல் (நம்பி.
வரைவு 4.).

  (பி.-ம்.) 1 ‘கானநாடன்? 2 ‘முடையகொறோழியானே? 3 ‘சிறப்
புப் பெறும் வண்ணம்? ( 3 )