273

3. குறிஞ்சி

(28) குரக்குப் பத்து


273. அத்தச் செயலை 1துப்புறழொண்டளிர்
    புன்றலை மந்தி வன்பற ழாரும்
    நன்மலை நாட நீசெலின்
    நின்னயந் துறைவி யென்னினுங் கலிழ்மே.

   எ-து வரைவிடைவைத்துப் பிரியும் தலைமகன், ‘நின்
துணைவியை உடம்படுவித்தேன். இனி நீயே இதற்கு உடம்படாது
கலிழ்கின்றாய் என்றாற்குத் தோழி கூறியது.

   (ப-ரை.) பிரிவுடம்பட்டாளேயாயினும் நீ பிரிந்துழி ஆற்றா
ளென்பதாம். அசோகந்தளிரை மந்திப்பார்ப்பு அருந்துமென்றது.
இளமை கழிவதற்கு முன்னே வரைதல் வேண்டுமென்பதாம்.

  குறிப்பு. அத்தச் செயலை-செம்மையான அசோகமரத்தினது.
துப்புறழ்-பவளத்தை ஒத்த. புன்றலைமந்தி வன்பறழ்-சிவந்த தலை
யையுடைய பெண்குரங்கினது வலிய குட்டி. ஆரும்-அருந்தும்.
செலின்-பிரிந்து சென்றால், நின் நயந்து உறைவி-உன்னை விரும்பி
உறையும் தலைவி; 309 : 3. கலிழ்ம்-கலங்கும்.

  (பி-ம்.) 1 ‘துப்புற ழொண்மணி? ( 3 )