எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வருத
லால் எதிர்ப்பாடு பெறாத தோழி குறியிடத்து எதிர்ப்பட்டு அவன்
கொடுமை கூறி நெருங்கிச் சொல்லியது,.
(ப-ரை.) நின் நயந்த எம் நலம் வாடுதல் ஒருதலையன்றே ;
அங்ஙனமாயினும் நின்னை யாங்கள் நயந்ததனை வெருளாது
அருளப் பெறின் எம் நலம் வாடுமோ எ-று.
குரங்கின் தலைவனாகிய கடுவன் சூரற்கோலைக்கொண்டு தானே
அழிகின்ற மாரிமொக்குளைப்புடைத்து அழிக்கு நாடவென்றது
நின்னை நயந்த எங்கள் நலம் நீ வரையாமலே அழிகின்ற இதனை நீ
இவ்விடையிட்ட ஒழுக்கத்தாலே அழியாநின்றா யென்பதாம்.
குறிப்பு. குருமயிர்க்கடுவன்-நிறம் பொருந்திய மயிரையுடைய
ஆண்குரங்கு : குறுந். 373 : 4-5. தலைவனாகிய கடுவன். சூரல்-
பிரம்பு. வியலறை-அகன்ற பாறையின்கண். மாரிமொக்குள்-மழை
நீரின் குமிழியை; சீவக. 409. புடைக்கும்-அடிக்கும். நயந்தனம்-
விரும்பினோம். அருளுதி யெனின்-வெருளாது அருள்வாயாயின்.
நாட, அருளுதியெனின் எம் நலம் வாடுமோ? ( 5 )