277

3. குறிஞ்சி

(28) குரக்குப் பத்து


277. குறவர் முன்றின் மாதீண்டு துறுகற்
கல்லா மந்தி 1கடுவனோ டுகளும்
குன்ற 2நாடநின் மொழிவ லென்றும்
பயப்ப நீத்த லென்னிவள்
   
பயப்ப நீத்த லென்னிவள்
   கயத்துவளர் குவளையி னமர்த்த கண்ணே.

   எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் புணர்ந்து நீங்குழி
எதிர்ப்பட்ட தோழி வரைவு கடாயது.

  (ப-ரை.) குறவர் முன்றிலில் மாதீண்டுதுறுகற்கண்ணே நாணாது
மந்தி கடுவனோடு உகளும் நாடவென்றது சுற்றத்தார் நடுவே இவ்
வொழுக்கம் புலனாகிய ஞான்று விளையும் ஏதத்திற்கு நாணாதோய்
என்பதாம்.

  குறிப்பு. மாதீண்டுதுறுகல்; ஆதீண்டுகுற்றிபோல, உகளும்-
துள்ளும், நின்னை மொழிவல். என்றும்-எப்பொழுதும், பயப்ப-
பசப்ப, நீத்தல்-பிரிதல். கயம்-நீர்நிலை. குவளையின்-குவளையைப்
போல, நாட, கண் பயப்ப என்றும் நீத்தல் என்.

    (பி-ம்.) 1 ‘கடுவ னெடுக்கும்’ 2 ‘நாடனின்’ ( 7 )