எ-து இரவுக்குறிவேண்டுந் தலைமகனைத் தோழி வரலருமைகூறி
மறுத்தது.
(ப-ரை.) ‘கல்லகத்தது எம்மூர்? என்றது சூழ்ந்த மலைகளின்
நடுவகத்தது எம்மூர் எ-று.
இற்றிமேற் படர்ந்த குளவித்தளிரை மேய்ந்து வரையகத்திலே
மந்தி கடுவனோடு உகளும் நாடனாதலான், இதற்கு முன்பு இவள்
நின்னோடு நுகர்ந்ததேகொண்டு இனி இவள் நின்பதிக்கண்
வாழ்தல் வேண்டுமென்பதாம்.
குறிப்பு. கல்-மலை. இற்றி-இத்தி மரத்தில், புல்லுவன-
படர்வனவாகிய, குளவி-மலை மல்லிகைத் தளிர். இத்தி புல்லுவன
குளவியை ஏறி மேய்ந்த மந்தி, குளவிக்கொடி : பதிற். 12 : 10 ; ஐந்.
எழு. 3. உகளும்-ஆடுகின்ற. கல்லகத்தது-மலைகளின் நடுவகத்தது.
அலராங்கட்டு-அலரைக் கூறும் ஊரையுடையது.
(பி-ம்,) 1 ‘கல்லிவரித்தி? ( 9 )