280

3. குறிஞ்சி

(28) குரக்குப் பத்து


280. கருவிரன் மந்திக் கல்லா 1வன்பார்ப்
   பிருவெதிரீர்ங்கழை யேறிச் சிறுகோல்
   மதிபுடைப் பதுபோற் றோன்று நாட
   வரைந்தனை நீயெனக் கேட்டியான்
   உரைத்தனெ னல்லெனோ வஃதென் யாய்க்கே.

   எ-து புணர்ந்துடன் போகிய தலைமகன் தலைமகளைக் கரணவகை
யான் வரைந்தானாக, எதிர் சென்ற தோழிக்கு, இனி ‘யான் இவளை
வரைந்தமை நுமக்கு உணர்த்த வேண்டும்? என்றானாக அவள்
சொல்லியது.

  (ப-ரை.) குரங்கின் இளம்பார்ப்பு இருவெதிரீர்ங் கழையேறி மதி
புடைப்பதுபோல் தோன்றும் நாடவென்றது, தீங்குசெய்வாயைப்
போலத் தோன்றுவதல்லது உண்மைவகையாற் செய்யாயென்ப
தாம்.

   குறிப்பு. பார்ப்பு-குட்டி. மந்தியினது கல்லாப் பார்ப்பு; குறுந்.
69 : 3, இருவெதிர்-பெரிய மூங்கில். சிறுகோல்-வெதிர்ங்கழையின்
கோல்; ஐங். 278 : 1. பார்ப்பு சிறு கோலால் மதியைப் புடைப்பது,
போல் தோன்றும் நாட, நாட, நீ வரைந்தனை எனக் கேட்டு யான்
என் யாய்க்கு உரைத்தனென் அல்லெனோ? உரைத்தேன் என்றபடி.

   கரணவகையான் மணத்தல் : தொல். கற்பு. 1, 2.

  (மேற்). மு. தாயர்க்கு உரியனகூறித் தோழிக்குக் கூற்று நிகழும்
என்ற வழித், தலைவன் கரணவகையால் வரைந்தானாக எதிர்சென்ற
தோழிக்கு யான் வரைந்தமை நுமர்க்குணர்த்தல் வேண்டுமென்
றாற்கு அவள் உணர்த்தினேனென்றது (தொல். அகத். 39. ந.)
தலைவன் பாங்கிக்கு யான் வரைந்தமை நுமர்க்கியம்பு என்ற வழி
அவள் தான் அது முன்னே சாற்றியதுரைத்தல் (நம்பி. வரைவு 24.)

   (பி-ம்.) 1 ‘விளம்பார்ப், பிருவெதி ரங்கழை? ( 10 )

(28) குரக்குப்பத்து முற்றிற்று.