எ-து இரவுக்குறி நேர்த்த தோழி தலைமகன் வந்து புணர்ந்து
நீங்குழி அவனை எதிர்ப்பட்டுச் செல்லியது.
(ப-ரை.) கொடுச்சி கடியவும் சோலைச் சிறுகிளி தினையை
யுன்னும் நாடவென்றது காவலர் காத்தொழுகவும் களவொழுக்கத்
தையே விரும்பா நின்றாயென்பதாம்.
குறிப்பு. சாரற்புறத்த-மலைச்சரிவிடத்திலுள்ள. குரல்-கதிர்.
கிளி, கொடிச்சி, கடியவும் தினையை உன்னும் நாட. கடியவும்-நீக்க
வும். உன்னும்-மீண்டும் வருதலை நினைக்கின்ற. வாரல்-வாராதே,
கோட்டுமா-யானை. வழங்கும்-பயில்கின்ற நெறி-வழி, நாட,
இருள் பெருகின; மா வழங்கும் நெறியே வாரல்.
(மேற்) மு. இரவுக்குறியை நயந்த தலைமகனுக்கு ஆறின்னாமை
யைக் கூறியது. (தொல். களவு. 24, இளம்)
(பி-ம்.) 1 ‘யுண்ணு நாட’ 2 ‘வாரால்’ ( 2 )