எ-து உடன்போக்குத் துணிந்த தலைமகன் அஃதொழிந்து
தானே வரைவிடைவைத்துப் பிரியநினைந்ததனைக் குறிப்பினாள்
உணர்ந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.; தலைமகள் வரைவிடை
வைத்துப் பிரிவலென்ற வழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
தூஉமாம்.
(ப-ரை.) புகரென்றது உடன்போதலை. தினையிற்கடிந்த கிளி
யைத் தினையரிகாற்கண்விளைந்த அவரைக்கண்ணுங்கடியும் நாட
னென்றது வரையாதொழுகுதலன்றி உடன்போதலையும் நம்மை
விலக்காநின்றானென்பதாம்.
குறிப்பு. இருவியினது வெள்ளிய தாளடியில் காய்த்த அவரைக்
கண்வருகின்ற கிளியைக் கடியும். தினையரிகாலில் அவரை இருத்
தல் : குறுந். 82 : 4-5. புகர்-குற்றம் ; என்றது வரையாது ஒழுகு
தலை, என்மாமைக்கவினைக் கவரும். (பி-ம்) 1 ‘புகரின்றுய்ந்தனன்’ ( 6 )