288

3. குறிஞ்சி

(29) கிள்ளைப் பத்து


288. நன்றே செய்த வுதவி 1நன்றுதெரிந்
    தியாமெவன் செய்குவ நெஞ்சே காமர்
    மெல்லியற் கொடிச்சி காப்பப்
    பல்குர லேனற் பாத்தருங் கிளியே.

    எ-து கிளிகள் புனத்தின்கண் படியாநின்றனவென்று
தலைவியைக் காக்க ஏவியவழி அதனையறிந்த தலைமகன் உவந்து
தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

  குறிப்பு. நன்று தெரிந்து-நன்மையைத் தெரிந்து. எவன்
செய்குவம்-என்ன கைம்மாறு செய்வோம். காமர்-அழகிய. காப்ப-
தினைப்புனம் காப்ப-பல்குரல் பாத்தரும்-பலகதிர்களில் பரவுதலைச்
செய்யும். நெஞ்சே, கிளி நன்றே உதவி செய்த, யாம் எவன்
செய்குவம்.

  (மேற்). மு. இது கிளி புனத்தின்கட் படிகின்றதென்று தலைவி
யைக் காக்க ஏவியதனை அறிந்த தலைவன் அவளைப் பெற்றேமென
மகிழ்ந்து கூறியது (தொல். களவு, 13, ந.).
    (பி-ம்.) 1 ‘நன்றிதிரிந்து, ( 8 )