எ-து இற்செறித்தபின்னர்த் தோழி வரைவுகடாவுழி முதிர்ந்த
தினைப்புனம் இவள்காத்தொழிந்தால் 2வரைவலென்றாற்கு அவள்
சொல்லியது.
குறிப்பு. செத்து-அறிந்து. பைங்குரல் ஏனல்-பசுமையான
கதிரையுடைய தினையின்கண். கொடிச்சியினது இனியகுரலைத் தம்
இனமென நினைந்து, ஏனற்கண் மற்றைக் கிளிகள் படர்தரும்;
ஆதலின் காவலைக் கடியுநர் போல்வர். வரைந்தனை கொண்மோ-
வரைந்து கொள்வாயாக.
(மேற்) மு. இது குறவர் இயல்புணர்த்தி ‘வரைக? எனத் தோழி
கூறியது. (தொல். களவு, 24, இளம்.). களவொழுக்கம் நீட்டித்த
வழித் தோழி பட்டாங்கு கூறி வரைதல் வேட்கையை யுணர்த்தியது
(தொல். பொருள், இளம்.).
(பி-ம்.) 1 ‘மலைந்தனை? 2 ‘வரைபவென்றாற்கு?