290

3. குறிஞ்சி

(29) கிள்ளைப் பத்து


290. அறம்புரி செங்கோன் மன்னனிற் றாநனி
    சிறந்தன போலுங் கிள்ளை பிறங்கிய
    பூக்கமழ் கூந்தற் கொடிச்சி
    நோக்கவும் படுமவ ளோப்பவும் படுமே.

    எ-து காவல்மிகுதியான் இரவுக்குறி மறுக்கப்பட்டு நீங்கிய
தலைமகன் வந்துழி அவன்கேட்டு வெறுப்புத் தீர்த்தற் பொருட்டால்
தினைப்புனங்காவல் தொடங்காநின்றாளென்பது தோன்றத்தோழி
கூறியது.

  (ப-ரை.) மன்னனென்றது தலைமகனை.

  குறிப்பு. மன்னனின்-தலைவனினும். நனிசிறந்தன-மிகச்
சிறந்தன. பிறங்கிய-விளங்கிய. ஓப்பவும்-கடியவும் கொடிச்சி
யால் நோக்கவும் ஓப்பவும் படும். அதனால் கிள்ளை மன்னனிற்
சிறந்தன போலும். ( 10 )

(29) கிள்ளைப்பத்து முற்றிற்று