எ-து வாயில்வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச்
சொல்லியது.
குறிப்பு. நம் வீட்டில் தலைவன் ஒரு நாள் வந்தற்கு; நம்
தனித்தன்மைப் பன்மை. அழுப-அழுவார். என்ப-என்பார்;
அசையுமாம். ஒன்றுக்கு ஏழு கூறல் மரபு: குறுந். 24:4, 172:
5-6; குறள், 1269. அவன் பெண்டிரென்றது பரத்தையரை. தீ உறு
மெழுகின்-நெருப்பையுற்ற மெழுகுபோல; ஞெகிழ்வனர்-நெகிழ்ந்து
?மெழுகெரி முகந்த தொக்குந்தாய் மெலிவு? (சீவக. 2095). ஞெகிழ்
வனர் அழுப என முடிக்க. ( 2 )