33

(4) தோழிக்குரைத்த பத்து


33. அம்ம வாழி தோழி மகிழ்நன்
   மருதுயர்ந் தோங்கிய விரிபூம் பெருந்துறைப்
   1பெண்டிரொ டாடு மென்பதன்
   தண்டா ரகலந் தலைத்தலைக் கொளவே.

இதுவுமது.

  குறிப்பு. மருதுயர்ந் தோங்கிய துறை: ஐங். 7:5-6, குறிப்பு.
பெண்டிர் - பரத்தையர். ஆடும்-ஆடுவான். அகலம்-மார்பை.
தலைத்தலைக்கொள-ஒவ்வொருவரும் தெப்பமாகத் தத்தமிடத்தே
கொள்ளும்படி; “ஆர்கலி வெற்பன் மார்புபுணையாக............. அருவி
யாடுதலினிதே” (குறுந். 353:1-3); “வவ்வுவல் லார்புணை யாகிய
மார்பினை” (பரி. 6:80); “பெருமலை நாடன் மார்பு புணையாக,
ஆடுகம் வம்மோ” அகநா. (312:7-8). தண்டாரகலம் என்றாள் ஊற்றின்
இனிமை கருதி.

   (பி-ம்) 1 ‘பெண்டிரொடு மாடும்’                          ( 3 )