எ-து ‘ஆற்றது அருமை நினைந்து நீ ஆற்றாயாதல் வேண்டா,
அவர் அவ்வழி முடியச் சென்றார்’ என்ற தோழிக்குத் தலைமகள்
சொல்லியது.
குறிப்பு. வேங்கை கொய்யுநர் - வேங்கைப் பூவைப் பறிப்பவர்.
குறுந். 208 : 2-4. பஞ்சுரம் - பாலைப்பண் : பெருங். 1. 52 : 89.
விளிப்பினும் - பாடினும்; குறுந். 207 : 3, 291 : 4; மணி. 4 : 13:
திரி. 11: சீவக. 16941, 291. ஆரிடைச் செல்வோர் - அரிய
வழியில் செல்பவர். வரூஉம் - அஞ்சும். இறந்தனர் - கடந்தனர்.
நீடுவர் - குறித்த காலத்தில் வாராமல் காலம் தாழ்ப்பர். நெஞ்சு
நினையும்.
கொடுஞ் சித்தத்தையும் மாற்றி இன்பம் எய்துவிக்கும் பாலைப்
பண்ணைக்கேட்டும் அதை விரும்பாமல் வெருவுவர் என்றமையின்
அக்காட்டு வழியினது அருமையும் கொடுமையும் கூறியவாறு.
(பி-ம்) 1 ‘பைஞ்சுரம்’ ( 1 )