எ-து தலைமகள் புணர்ந்துடன் போகியவழிச் செவிலியாற்றாமை
கண்ட நற்றாய் அவட்குச் சொல்லியது.
(ப-ரை) ‘தெறுவது’ என்றது யான் அவள்மேல் வைத்த காதல்
என்னால் தெறப்படுவது எ-று.
குறிப்பு. தெறுவது - சுடுகின்றது; புறநா. 29 : 9. நும்மகள்
விருப்பு - நும்மகள் மேல் வைத்த விருப்பு; “பொருப்பன் விருப்பு”
(திருச்சிற். 140 உரை). விருப்பு தெறுவது. அவலம் - துன்பம்.
சாஅய் - மெலிந்து. படர் தலைவி நினை வாலுண்டாகிய நோய். அட
வருத்த நாடு இடை விலங்கிய - இருவர் நாட்டையும் இடையில்
தடுத்துப் பிரித்த வைப்பு - இடம். காடிறந்தனள் - காட்டைக் கடந்
தனள்.
(மேற்.) தலைவி உடன்போயவழித் தான் பின் செல்லாதே
எஞ்சிய காலத்தில் செவிலிக்குக் கூற்று நிகழும்; இது பின் செல்லாது
வருந்தியிருந்த செவிலியைக் கண்ட நற்றாய் கூறியது; இது நற்றாய்
கூற்றாய்ச் செவிலி மேல் ஆயிற்று (தொல். களவு, 24, ந.). தலைவி
சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல் (நம்பி. வரைவு. 21)
(பி-ம்) 1 ‘வெண்மகள்’ 2 ‘சாஅயப்’ 3‘கலங்கா’ 4‘ணம்
மணங்கியோளே’, ‘ளெங்காதலோளே’ ( 3 )