எ-து சொல்லாது தலைமகன் பிரிந்துழித் தலைமகள்
வேறுபாடு கண்ட தோழி இரங்கிச் சொல்லியது.
(ப-ரை) ‘பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கட்பூசல்? என்றது
அவர் போகின்ற காலத்து விலங்காத வகை துயின்றீரெனக் கண்
ணொடு புலந்து கூறுகின்ற பூசல் (எ.று).
குறிப்பு. பாயல் - தூக்கம்; ஐங். 176 : 1 குறிப்பு. பூசல் - ஆர
வராம்; வருத்தம் எனினுமாம்: பதிற். 44 : 12. கண்ணொடு புலந்து
கூறுகின்ற பூசல்; கலித். 34 : 24 சீவக. 1373 சேயர் - நெடுந்தூரத்
திலிருப்வர். இழை - ஆபரணம். செல்லல் - துன்பத்தை. இழை
நெகிழ் செல்லல் : குறுந். 188 : 3, 358 : 1 உறீஇ - அடைவித்து.
கழை முதிர் சோலை - மூங்கில் முதிர்ந்த சோலை. காடிறந்தோர் பூசலைக்
கேளார், சேயர் என்ப.