322

4 பாலை

(33) இடைச்சுரப் பத்து


322. நெடுங்கழை முளிய வேனி 1னீடிக்
    கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
    வெய்ய வாயின முன்னே யினியே
    ஒண்ணுத லரிவையை யுள்ளுதொறும்
    2தண்ணிய வாயின சுரத்திடை யாறே.

      எ-து இடைச்சுரத்துக்கண் தலைமகன் தலைமகள் குணம்
நினைத்தலில் தனக்குற்ற வெம்மை 3நீங்கியது கண்டு சொல்லியது.

   குறிப்பு. கழை - மூங்கில். முளிய -உலர கல் பக - பாறைகள்
பிளக்க, தெறுதலின் -காய்தலின் வெய்ய வாயின-வெப்பம்.
பொருந்தியவாயின. இனி - இப்போது. அரிவையை - தலைவியை
உள்ளுதொறும் - நினைக்கும் போதெல்லாம் தண்ணிய வாயின -
குளிர்மை பொருந்தினவாயின. சுரத்திடை ஆறுமுன் வெய்யவா
யின. இனித் தண்ணியவாயின. தலைமகள் குணத்தைத் தலைவன்
சுரத்தே நினைத்தல் : ஐங். 325; 327; குறுந். 274.

   (மேற்.) மு. தலைமகளை இடைச்சுரத்து நினைத்துத் தலைவன்
கூறதல் : (தொல். அகத். 48, இளம். கற்பு. 5 ந.)

     (பி-ம்) 1 ‘னீடக்? 2 ‘தண்ணளியாயின?. ‘தண்ணளியவாயின்?
‘நீக்கியது?. ( 2 )