323

4 பாலை

(33) இடைச்சுரப் பத்து


323. வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்
   கள்ளியங் கடத்திடைக் கேழல் பர்க்கும்
   வெஞ்சுரக் கவலை நீந்தி
   வந்த நெஞ்சநீ நயந்தோள் பண்பே.

   எ-து இடைச்சுரத்துத் தலைமகள் குணம் நினைந்த தலை
மகன். ‘அவள் பண்பு வந்தன? என உவந்து தன்நெஞ்சிற்குச்
சொல்லியது.

     குறிப்பு. வள் எயிறு - கூர்மையான பற்கள். வயவுறு பிணா-
வயா நோயுற்ற தனது பெட்டைக்கு; வயாநோய்: ஐங். 51,
குறிப்பு கடத்திடை - பாலை நிலத்தே. கள்ளியங்கடம் : குறுந்
16:5,67 : 5. கேழல் - பன்றியை. கவலை நீந்தி -கவர்த்த
வழிகளைக் கடந்து. நெஞ்சம் : விளி. நயந்தோள் - தலைவியது
. பண்பு வந்த. ( 3 )