327

4 பாலை

(33) இடைச்சுரப் பத்து


327. பொறிவரித் தடக்கை1 வேத லஞ்சிச்
    சிறுகண் யானை நிலந்தொடல் செல்லா
    2வெயின்முளி சோலைய வேயுயர் சுரனே
    அன்ன வாரிடை யானும்
    தண்மை செய்தவித் தகையோள் பண்பே.

  எ-து பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தலைமகள் குணம்
நினைந்து இரங்கிச் சொல்லியது.

  (ப-ரை) ‘சிறுகண்யானை நிலந்தொடல் செல்லா? என்பது
முற்று.

  குறிப்பு. பொறிவரித்தடக்கை - புள்ளிகளையும் வரிகளையுமுடைய
வளைந்த துதிக்கை. வேதல் - சுடுதல். நிலம்தொடல் செல்லா-
நிலத்தைத் தொட்டுத் தோய்ந்து செல்லா; யானையின்கை நிலந்
தோய்தல் உத்தம இலக்கணம்: ?நிலத் தோயு மிரும்பிடித்
தடக்கை? (சிறுபாண். 19) வெயில் முளி சோலைய வேய்-வெயி
லால் உலர்ந்த சோலையிலுள்ள மூங்கில்; ஐங். 315 : 4.அன்ன-அத்
தன்மையான ஆரிடையானும்-அரிய வழியிடத்தும்; ஆன்: இடப்
பொருளில் வந்தது. தகையோள் பண் துண்மை செய்த.

    (பி-ம்) 1‘வேக? 2‘வெயின் முனி? ( 7 )