எ-து ‘மழைவீழ்தலாற் சுரம் தண்ணென்றது, இனி வருத்த
மின்றிப் போகலாம்’ என்ற உழையர்க்குத் தலைமகன் சொல்லியது.
குறிப்பு. தளித்தென-துளித்ததாக, தாஅய்-பரந்து. தண்ணிய
வாயினும்-குளிர்ந்த தன்மையையுடையனவாயினும். துணை
ஒழிய தலைவியைப் பிரிந்து. கடம்-அருநெறி. சோலைய-சோலையை
யுடையனவான. காடிறந்தேற்கு-காட்டைக்கடந்த எனக்கு.
காடிறந்தேற்கு வெய்ய.
உழையர்-பக்கத்திலிருந்து ஏவலைச்செய்பவர்.
(பி-ம்) 1‘காடிறந்தோற்கே’ ( 8 )