329

4 பாலை

(33) இடைச்சுரப் பத்து


329. ஆள்வழக் கற்ற பாழ்படு நனந்தலை
    வெம்முனை யருஞ்சுர நீந்தி நம்மொடு
    மறுதரு வதுகொ றானே செறிதொடி
    கழிந்துகு நிலைய வாக
    ஒழிந்தோள் கொண்டவெ 1னுரங்கெழு நெஞ்சே.

    எ-து இடைச்சுரத்தின்கண் மீளலுறும் நெஞ்சினை நொந்து
தலைமகன் உழையர்க்குச் சொல்லியது.

  குறிப்பு. ஆள்வழக்கு அற்ற-மனிதர் நடமாட்டமே இல்லாத.
நனந்தலை-பரந்த இடத்தையுடைய. நீந்தி-கடந்து. மறுதருவது
கொல்-சுழலுவதோ. உகு நிலையவாக-உகுகின்ற நிலைமையுடையன
வாக. ஒழிந்தோள்-பிரிந்தோள்; தலைவி. உரம்-வலிமை. நெஞ்சு
மறுதருலது கொல்.
மீளலுறும் நெஞ்சம்-தலைவியின்பால் மீளும் நெஞ்சம்.

    (மேற்.) மு. இது மீளலுறும் நெஞ்சினை நொந்து தலைவன்
உழையர்க்கு உணர்த்தியது. (தொல். கற்பு. 5, ந.)

  (பி-ம்) 1 ‘னூங்கெழு? ( 9 )