330

4 பாலை

(33) இடைச்சுரப் பத்து


330. வெந்துக ளாகிய வெயிற்கட நீந்தி
    வந்தன மாயினு மொழிகினிச் செலவே
    அழுத கண்ண ளாய்நலஞ் சிதையக்
    கதிர்தெறு வெஞ்சுர நினைக்கும்
    அவிர்கோ லாய்தொடி யுள்ளத்துப் படரே.

   எ-து பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.

  குறிப்பு. வெம் துகளாகிய-வெய்ய பொடியாகிய ; கடத்துக்கு
அடை. கடம்-பாலைநிலம். ஒழிகினி-ஒழிக இனி; தொகுத்தல்.
விகாரம் ; கலித். 4 : 25. செலவு இனி ஒழிக. ஆய்நலம்-அழகிய
நலம். கோல்-திரட்சி. தொடி-வளை. ஆய்தொடி-தலைவியினது.
படர்-நினைவு. உள்ளத்துப் படர் சுரம் நினைக்கும், இனிச் செலவு
ஒழிக.

( 10 ) (33) இடைச்சுரத்துப் பத்து முற்றிற்று.