எ-து தலைமகன் பிரிந்துழி, ‘செல்லும் வழியிடத்து மலையின்
உளதாகிய நாற்றத்தால் நம்மை நினைத்து முடியச்செல்லார்,
மீள்வரோ’ எனக் கேட்ட தலைவிக்கு, ‘அவர் முடியச்சென்றார்’ என்ப
தறிந்து இரங்கித் தோழி கூறியது.
(ப-ரை.) சென்றசுரம் பிரிந்தார் தத்தம் துணைவியரை நினையும்
படி வெறிகமழும் மலரையுடைத்தாகலும் செலற்கருமையால் இன்
னாமையுடைமையும் தலைவி இரங்குதற்குக் 4காரணமாயின எ-று.
குறிப்பு. கருங்கால் மராஅத்து-கரிய அடிமரத்தையுடைய
வெண்கடம்பு மரத்தில். சினை-கிளையிலுள்ள. வான்பூ-வெள்ளிய
பூ. ஒழிந்தோர்-தாம் பிரிந்த துணைவியரை. உள்ள-நினைக்க. கமழும்-
நறுமணம் வீசுகின்ற. அவர்-தலைவன். வெற்பின் ஆறு இன்னாது
என்ப.
(பி-ம்.) 1 ‘யிரங்குப் பத்து’ 2 ‘வெஞ்சினை’ 3 ‘இரங்கத்’ 4 ‘காரணமாயிற்று’. ( 1 )