எ-து பிரிந்த தலைமகன், ‘சுரத்திடைக் கழியச் சென்றான்?
என்பது கேட்ட தலைமகள் அங்குள்ள மாக்களை நொந்து தோழிக்குச்
சொல்லியது.
குறிப்பு. என்னதூஉம்-சிறிதும். அறன்இல-அறமில்லாதன.
மாக்கணம்-விலங்கின் கூட்டம். காதலிப் பிரிதல்-காதலியைப்
பிரிதல். செல்லல்-போதல் வேண்டா, என்னாதவே-என்று கூறா
தனவே மாக்கணம், ‘ஐய, பிரிதல் கொடிது செல்லல்? என்னாதவே,
ஆதலின், அறனில.
(பி-ம்.) 1 ‘மான்கணம்? 2 ‘வென்னாவவ்வே? ( 2 )