எ-து புட்களை நொந்து சொல்லியது.
குறிப்பு. யாவதும் -சிறிதும். வல்லாகொல்லோ-வல்லமையில்லா
தனவோ அவண-தலைவன் சென்ற இடத்திலுள்ள. புள்ளினப்
பெருந்தோடு-புள்ளினங்களின் பெரிய தொகுதி: தோடு - தொகுதி;
பதிற். 12 : 6, 19 : 16. துணைபுணர்ந்து உறைதும் - பெடையொடு
கூடித் தங்குகின்றோம். யாங்கு- எப்படி. உறைதி-தங்குகிறாய். புள்
ளினம், ‘யாம் புணர்ந்துறைதும்; நீ யாங்குப் பிரிந்து உறைதி? என்னா
தவே ஆதலின் வல்லாகொல்லோ.
(மேற்.) மு. இது புள்ளை நொந்து தலைவி கூறியது (தொல்.
கற்பு 6, ந)
(பி-ம்) 1 ‘வல்லார்கொல்லோ? 2 ‘யென்னுமாறே, ‘யென்னா வவ்வே? ( 3 )