334

4 பாலை

(34) தலைவி1யிரங்கு பத்து


334. அம்ம வாழி தோழி சிறியிலை
    நெல்லி நீடிய கல்காய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் 1பின்செலச் சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
பல்லித ழுண்க ணழப்பிரிந் தோரே.

   எ-து பிரிவு நீட அற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்
லியது.

   (ப-ரை) ‘பல்லிதழுண்கண் அழப் பிரிந்தோர்’ என்றது தாம்
குறித்த எல்லைக்கண் வாராது நீட்டித்தாரென்பதாம்.

   குறிப்பு. சிறியிலை நெல்லி-சிறிய இலைகளையுடைய நெல்லி மரம்.
சென்றோர்-தலைவர். பல்லிதழ் உண்கண் : ஐங். 170 : 4, குறிப்பு.
அழப்பிரிந்தோர் வலியர் தலைவி அழுதல் : குறுந். 82 : 2.

   (மேற்.) மு. இது வன்புறை யெதிரழிந்து தலைவி கூறியது
(தொல். கற்பு. 8. ந.)
     (பி-ம்) 1 ‘பின்படச்’ ( 4 )