4 பாலை
(34) தலைவி1யிரங்கு பத்து
336. அம்ம வாழி தோழி நம்வயிற் பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற நின்றதில் பொருட்பிணி முற்றிய என்றூழ் நீடிய சுரனிறந் தோரே.
எ-து பிரிவதற்கு முன்பு தங்களுடன் அவனொழுகிய திறம் நினைந்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. பிரியலர் போல - பிரியாதவர் போல. பொருட்பிணி- பொருள் முயற்சிக்கண் உள்ள உள்ளப்பிணிப்பு; குறுந். 225 : 7. என்றூழ்-வெயில் புணர்ந்தோர்-இறந்தோர். ( 6 )