337

4 பாலை

(34) தலைவி1யிரங்கு பத்து


337. அம்ம வாழி தோழி நம்வயின்
மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனியிருங் குன்றஞ் சென்றோர்க்குப் பொருளே.

    எ-து தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழித் தன்முயக்கினும்
அவற்குப் பிற்காலத்துப்பொருள் சிறந்ததெனத் தலைவி இரங்கித்
தோழிக்குச் சொல்லியது.

    குறிப்பு. நம்வயின் - நம்மிடம். மெய்யுற உடல் பொருந்த. கை
கவர் முயக்கினும்-கைகள் விரும்புகின்ற முயக்கத்தைக் காட்டிலும்.
சென்றோர்க்குப் பொருள்தாம் முயக்கினும் மன்ற இனிய; கலித். 18;1-2.