351

4 பாலை

(36) வரவுரைத்த பத்து


351.அத்தப் பலவின் வெயிறின் சிறுகாய்
   அருஞ் 1சுரஞ் செல்வோ ரருந்தினர் கழியும்
   காடுபின் னொழிய வந்தனர் தீர்கினிப்
   பல்லித ழுண்கண் மடந்தைநின்
   நல்லெழி லல்குல் வாடிய நிலையே.

   எ-து பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்ததோழி தலைமகட்குச்
சொல்லியது.

   குறிப்பு. அத்தப்பலவின்-வழியிலுள்ள பலாமரத்தினது.
அருந்தினர் கழியும்-அருந்திச்செல்லும். தீர்கினி-தீர்கஇனி;
தொகுத்தல் விகாரம்; ஐங். 449 : 4, பல்லிதழ் உண்கண் : ஐங்.
170 : 4, குறிப்பு. மடந்தை : விளி. வாடியநிலை இனித் தீர்க.
(பி-ம்.) 1 ‘சுரஞ்சொல்வோர் வருந்தினர்? ( 1 )