352

4 பாலை

(36) வரவுரைத்த பத்து


352. விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுக லன்ன விழுப்பிணர்ப்
பெருங்கை யானை யிருஞ்சின முறைக்கும்
   ெ்வஞ்சுர மரிய வொன்னார்
   வந்தனர் தோழிநங் காத லோரே.

இதுவுமது.

   (ப-ரை.) ‘வெஞ்சுரம் அரிய என்னார்’ என்றது இன்று
இடையிலே தங்காது வந்தனர். எ-று.

   குறிப்பு. விழுத்தொடைமறவர் - துன்பம் செய்யும் தொடுத்
தலையுடைய மறவர். எழுத்துடை நடுகல் ; ஐந். எழு. 29. தொலைந்
தோரது நடுகல் அன்ன. பிணர் - சருச்சரை. நடுகல் யானைப்
பிணருக்கு உவமை. உறைக்கும் -மிகும்; “உப்புறைப்ப” (பெரும்
பாண். 379. ந. மேற்) அரிய - கடத்தற்கு அரிய.