4 பாலை
(36) வரவுரைத்த பத்து
353. எரிக்கொடிக் கவைஇய செவ்வரை போலச் சுடர்ப்பூண் விளங்கு மேந்தெழி லகலம் நீயினிது முயங்க வந்தனர் மாயிருஞ் சோலை மலையிறந் தோரே.
இதுவுமது.
குறிப்பு. எரிக்கொடி- சோதிக்கொடி. கவைஇய - வளைந்த செவ்வரை - சிவந்த மலை. அகலம் - மார்பு. மார்புக்கு மலையும் அதன்மேலுள்ள அணிக்கு எரிக்கொடியும் உவமைகள். இறந்தோர் - கடந்தோனாகிய தலைவன். இறந்தோர் வந்தனர். அடி, 4; குறுந். 232 : 6. ( 3 )