354

4 பாலை

(36) வரவுரைத்த பத்து


354. ஈம்பிணவு புணர்ந்த செந்தா யேற்றை
   மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும்
   அரிய சுரன்வந் தனரே
   தெரியிழை யரிவைநின் பண்புதர விரைந்தே.

இதுவுமது.

   குறிப்பு. ஈர்ம்பிணவு - அன்புடைய பெட்டையை. ஏற்றை:
ஆண்பாற் பெயர். மறி-குட்டி மான்பிணை- பெண்மான். கொள்
ளாது - பற்றாமல். அரிவை : விளி. விரைந்து சுரனின்றும்
வந்தனர். ( 4 )