355

4 பாலை

(36) வரவுரைத்த பத்து


355. திருந்திழை யரிவை நின்னல முள்ளி
   அருஞ்செயற் பொருட்பிணி பெருந்திரு வுறுகெனச்
   1சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்
   சிறுகண் யானை திரிதரும்
   நெறிவிலங் கதர 2கானத் தானே.

   எ-து நினைந்த எல்லையளவும் பொருள்முற்றி நில்லாது பெற்ற
பொருள் கொண்டு தலைவியை நினைந்து மீண்ட தலைமகன்
அவட்குச் சொல்லியது.

   (ப-ரை) . ‘பொருட்பிணி பெருந்திருவுறுக? என்றது மேல்
உளதாகும் பொருட்பிணி திருவுறுவதாகவெனக் குறிப்பின்
வெகுண்டு உரைத்தது. ‘சொல்லாது பெயர்தந்தேனே? என்றது
உடன் சென்றார் விலக்குவரெனச் சொல்லாது மீண்டேன் (எ-று)

  குறிப்பு. அரிவை-விளி உள்ளி - நினைந்து பொருட்பிணி; ஐங்.
336 : 3, குறிப்பு. பெருந்திரு உறுக என - பெருஞ் செல்வத்தைப்
பெறுக என்று ; சீவக. 961 சொல்லாது - உடன் இருப்போரிடமும்
சொல்லாது. பெயர் தந்தேன் - மீண்டேன். பொறி - புள்ளி. பொறி
யானை : ஐங். 46; 6. அதர - வழியை உடைய கானத்தானே பெயர்
தந்தேன்.

  நினைந்த எல்லையளவும் பொருள் முற்றுநில்லாது; ?சுரம்பல
விலங்கிய அரும்பொருள், நிரம்பா வாகலின்? (குறுந். 59 : 5-6)

  (மேற்) மு. பாலைத்திணைக்கு விரவும் பொருள்களுள் ஒன்றாகிய
தலைவன் மீட்சி கூறிற்று; இது பெற்ற பொருள் கொண்டு நின் நலம்
நயந்து வந்தேன் என்றது (தொல். அகத். 45. ந.)

   (பி-ம்) 1‘ செல்லாது? 2‘கானந்தானே? ( 5 )