எ-து புணர்ந்துடன்போகிய தலைமகன் இடைச்சுரத்துக்கண்
விளையாட்டு வகையாற் பூத்தொடுக்கின்ற தலைமகளைக்கண்டு புகழ
அவள் அதற்கு நாணிக் கண்புதைத்தவழிச் சொல்லியது.
குறிப்பு. வேனிற் பாதிரி-வேனிற்காலத்தில் மலர்கின்ற பாதிரி
யினது; குறுந். 147 : 1. குவைஇ-குவித்து; குறிஞ்சி, 98 தொடலை
தைஇய-மாலை செய்த; நற். 138 : 7. கதவ - சினத்தையுடையன.
முலையினும் தோள் கதவ-கண்ணும் முலையும் தோளும் கதவ : நற்.
39; கலித் 57 : 19.
(மேற்) மு. இது புணர்தற் பொருளாயினும் கருப்பொருளால்
பாலையாயிற்று (தொல். அகத். 24, இளம்) இஃது உடன் போய
வழித் தலைவன் புகழ்ச்சிக்கு நாணித் தலைவி கண் புதைத்துழித்
தலைவன் கூறியது (தொல். அகத் 41. ந). (பி-ம்) 1‘உயரறற்
கான்யாற்றவிரறல்’ ( 1 )